சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க உத்தரவு

Salem News Today: கோடைகாலத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-04-13 02:52 GMT

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

குறிப்பாக, ஊரக விளையாட்டு மைதானம் அமைத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம், பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், தேசிய ஊரக சுயாட்சித் திட்டம், பாரதப் பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், இருப்பறையுடன் கூடிய சமையலறைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாள்தோறும் தங்கள் பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் உடனுக்குடன் நிறைவேற்றித்தரவும், இளைஞர்கள் நல்ல உடல் நலத்துடனும், ஒற்றுமை உணர்வுடனும் செயல்பட விளங்கும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஊரக விளையாட்டு மைதானங்களை அனைத்து ஊராட்சிகளிலும் முழுமையான பயன்பாட்டிற்கு உடனடியாகக் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப சமையற் கூடங்கள் புதிதாக அமைத்துக்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு இருப்பதால் இப்பணியினை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) உள்ளிட்ட அலுவலர்கள் ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வழங்கப்படும் அறிவுரைகளின்படி உடனடியாக திட்டப்பணிகளை செய்து முடித்திடவும், கோடைகாலம் என்பதால் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நேரடியாக மாவட்ட ஆட்சியரால் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பணிகளை குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  பாலச்சந்தர்,  உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழரசி, செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி திட்ட இயக்குநர் (வீடுகள்)   நாகராஜன், உதவி இயக்குநர் (தணிக்கை) இராமஜெயம், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News