20 டன் கிரானைட் கல்லுக்கு ஆர்டர்: மேட்டூர் வியாபாரியிடம் ரூ. 1. 98 லட்சம் மோசடி

Salem News Today: மேட்டூர் வியாபாரிடம் 20 டன் கிரானைட் கல் கொடுப்பதாக ரூ.1.98 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.;

Update: 2023-06-11 07:14 GMT

பைல் படம்.

Salem News Today: சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கிரானைட் கல் கடை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் மர்ம நபர் ஒருவர், இவரது செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு, தான் ஆந்திராவில் பெரிய அளவில் கிரானைட் கல் கடை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய வியாபாரி, அந்த மர்ம நபரிடம் 20 டன் கிரானைட் கல்லுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அதற்காக மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் மூலம் அவர் ரூ. 1 லட்சத்து 97 ஆயிரத்து 988 செலுத்தினார். இதனிடையே சேலத்தில் கிரானைட் கல் கடை நடத்தி வரும் ஒருவர், மேட்டூரை சேர்ந்த அந்த வியாபாரிக்கு போன் செய்து 3, 500 சதுரடி கிரானைட் கற்களை அனுப்பி உள்ளதாகவும், அதற்கான பணத்தை அனுப்புமாறும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மேட்டூர் வியாபாரி, மர்ம நபரின் செல்போன் எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டார். ஆனால் அது `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மர்ம நபர் மேட்டூர் வியாபாரியிடம் பணத்தை வாங்கி கொண்டு சேலத்தில் கிரானைட் கல் கடை நடத்தி வரும் நபரிடம் ஆர்டர் கொடுத்து அனுப்பி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே மோதல்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சிவதாபுரம் பட்டக்காரன் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கார்த்திக் (22 குடும்பத்தினருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர்க ளுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் காயம் அடைந்த இருத ரப்பை சேர்ந்தவர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் கார்த்தி, பிரபு, ஏழுமலை, ராமசாமி, தமிழ்ச்செல்வன், கோவிந்தராஜ், மற்றொரு ஏழுமலை, கணேசன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

சேலம் அமானி கொண்டலாம்பட்டி அரசமரத்து கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 67). இவர் நேற்று காலை சைக்கிளில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆத்தூரில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்த டேங்கர் லாரி சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளா னது. இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை அரு கில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் இளமுருகன் (62) என்ப வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News