தவறான முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை?: பட்டதாரி பெண் உயிரிழப்பு
தவறான முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக பட்டதாரி பெண் உயிரிழந்ததாக கூறி பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள்மறுப்பு;
உயிரிழந்த சூர்யா
சேலம் மாவட்டம் கருப்பூர் அடுத்த கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகள் சூர்யா வயது 27. என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சூர்யா பி.ஏ.பட்டதாரி ஆவார்.இவர்களுக்கு பூவிஷா,வயது 4.என்ற மகளும்,வருண் வயது 2.என்ற மகன் உள்ளனர். குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தனது தாய் வீடான பூனையானூருக்கு சூர்யா கடந்த 25 ந்தேதி வந்தார்.
அங்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சூர்யாவிற்க்கு 26 ஆம் தேதி டாக்டர் கௌரிசங்கர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில் மயக்கமருந்து அதிகளவு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் நினைவு திரும்பவில்லை.இதனால் டாக்டர் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 26ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கடந்த இரண்டு நாட்களாக நினைவு திரும்பாமல் இன்று அதிகாலை 3 மணி அளவில் சூரியா உயிரிழந்தார். இதனையடுத்து தவறான அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேட்டு உடலை வாங்க மறுத்து மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்துள்ளனர்.
மேலும் டாக்டர் கௌரி சங்கர் மற்றும் மயக்கவியல் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்