நல்லங்கியூர் மாரியம்மன் கோவில் திருவிழா

நல்லங்கியூர் மாரியம்மன் கோவில் திருவிழா, பக்தர்கள் பொங்கல் வைத்து, தீ மிதித்தனர்;

Update: 2025-04-04 05:50 GMT

கல்வடங்கம் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீ மிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பலர் எலுமிச்சை அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி வந்தும் தீ மிதித்தனர், மேலும் பலர் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல நங்கவள்ளி அருகே சூரப்பள்ளி கோட்டைமேடு கரிய காளியம்மன் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில்களில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று சக்தி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டம், அம்மன் ஊர்வலம் போன்ற நிகழ்வுகளும், கரிய காளியம்மன் கோவிலில் வண்டி வேடிக்கை மற்றும் அம்மன் ஊர்வலமும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர். இதேவேளையில் ஓமலூர், முத்துநாயக்கன்பட்டியில் உள்ள பில்லுக்கடை மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு மற்றும் கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Tags:    

Similar News