யுகாதி பண்டிகையையொட்டி மாதேஸ்வரன் மலையில் சேலம் ஐயப்ப சேவாசங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல்
madeswaran temple ugadi, annadhanam மாதேஸ்வரன் மலைக்கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி சேலம் ஸ்ரீ ஐயப்ப சேவாசங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
madeswaran temple ugadi, annadhanam
மாதேஸ்வரன் மலையில் யுகாதி பண்டிகையையொட்டி பக்தர்களுக்கு சேலம் ஐயப்ப சேவ சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாதேஸ்வரன் மலையானது இயற்கையான பசுமை நிறைந்த மலைகளில் அமைந்திருப்பது நமக்கு கண் கொள்ளாக்காட்சியாகும். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் இம்மலை அமைந்துள்ளதும் மலைப்பகுதியில் ரோடுகளின் வழியே சென்று கோவிலை அடைவதும் பசுமை நம்மை வரவேற்க தயாராகிறது என்று கூட சொல்லலாம்.மாதேஸ்வரன் மலைக்கு கர்நாடகா மட்டும்அல்லாமல் தமிழகம், மற்றும் உள்ள மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தீராத நோய்களைத் தீர்ப்பவனாக மாதேஸ்வரனை பக்தர்கள் நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர்.
madeswaran temple ugadi, annadhanam
madeswaran temple ugadi, annadhanam
அமைதியான மலைப்பகுதியின் நடுவே கோயில் . குளுமையான பிரதேசம். கர்நாடக மாநிலம் சார்பில் கோவில்களை நவீனப்படுத்தி அழகாக மிளி்ர்கிறது. பக்தர்களுக்கு நவீனமயமான தங்கும் அறைகளும் அங்கு உண்டு. மேற்கு மலைத் தொடர்ச்சியின் காடும் மலையும் நம்மை கர்நாடக மாநிலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.பக்தர்களைக் காக்கும் ஆபத்பாந்தவனாக எம்பெருமான் மாதேஸ்வரக்கடவுள் இக்கோயிலில் வீற்றிருந்து பல பக்தர்களின் மனக்குறைகளை தீர்த்து வைப்பதால் இக்கோயிலுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்வது வாடிக்கையான நிகழ்வாக திகழ்கிறது.
madeswaran temple ugadi, annadhanam
சேலம் ஸ்ரீஐயப்ப சேவா சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
madeswaran temple ugadi, annadhanam
108 அடி உயர மாதேஸ்வரர் சிலை அதாவது புலியின் மீது அமர்ந்த நிலையில் குன்றின் மேல் அமர்ந்த சிலையையும், 450கிலோ வெள்ளியினால் தயார்செய்யப்பட்ட வெள்ளித்தேரினை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அண்மையில் திறந்து வைத்தது இக்கோயிலுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது எனலாம்.
மைசூர் மன்னராக இருந்து ஸ்ரீஜெயசாம்ராஜ உடையார் பகதுார் ஸ்வாமிகள் ஸ்ரீமாதேஸ்வரன் மீது கொண்டிருந்த பெரும் பக்தியின் காரணமாக இந்த மலையில் பக்தர்கள் வந்து தங்குவதற்கு இருப்பிட வசதிகளைச் செய்து கொடுத்தார். பல ஏக்கர் புன்செய் நிலங்களையும், விலைமதிப்பில்லாத அளவுக்குத் தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் தானமாக கொடுத்தார்.
madeswaran temple ugadi, annadhanam
madeswaran temple ugadi, annadhanam
இவருக்கு பின்னர் ஜீஞ்சே கவுடா என்ற மலைவாழின பக்தர் இக்கோயிலை மேலும் சீரமைத்தார். அணுமலை, கனுமலை, ஜெனுமலை, பச்சை மலை, பவளமலை, லிங்கமலை, பொள்ளாச்சி மலை ஆகிய ஏழுமலைகள் இணைந்ததே மாதேஸ்வரன் மலை ஆகும். இங்கு வாழும் சோளிகர், ஜேனுகுருபர்,காடுகுருபர், குருபகவுடர் இனத்தவர்களுக்கு மாதேஸ்வரனே குல தெய்வம் ஆகும். இவர்களில் தம்மடிகள் என்பவர்கள் லிங்கத்தை கழுத்தில் மாலையாக அணிந்திருப்பார்கள். கண்ணப்ப நாயனாரின் வாரிசுகள்தான் இந்த கோயிலில் அ ர்ச்சகர்களாக வேலை செய்கின்றனர்.
சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மேலும் அதேபோல் மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம்.
madeswaran temple ugadi, annadhanam
madeswaran temple ugadi, annadhanam
யுகாதி பண்டிகையையொட்டி இக்கோயிலில் சேலம் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் சுமார் 40 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் சேவாசங்கத்தினைச் சார்ந்த ராஜமணிகண்டன் தலைமையில் குழுவினர் பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் விசேஷ பூஜைகள் நடந்தது. பின்னர் புலி, பசு, ருத்தராட்சமண்டப வாகனத்தில் உற்சவர் திருவீதி உலாவும், தங்கத்தேரோட்டநிகழ்ச்சியும் விமர்சையாக நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.