மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 113.96 அடி

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் 113.96 அடியாக உள்ளது.

Update: 2022-07-15 03:52 GMT

மேட்டூர் அணை.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி, கே.எஸ்.ஆர் அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணையில் இன்று காலை  நிலவரப்படி,  நீர்மட்டம் 113.96 அடியாகவும், அணைக்கும் நீர் வரத்து 82,642 கன அடியாக உள்ளது.

அணையிலிருந்து 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 82.64 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

Tags:    

Similar News