"காலைக்கதிர்" கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
சேலத்தில் "காலைக்கதிர்" கல்வி வழிகாட்டி: 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டார்;
சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் 'காலைக்கதிர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சி பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்காக நேற்று தொடங்கியது. அறிவியல், கலைப்பிரிவு, பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கடல்சார் படிப்புகள் போன்ற பல்வேறு துறைகள் குறித்து நிபுணர்கள் விளக்கமளித்தனர். 40க்கும் மேற்பட்ட அரங்குகளில் உயர்கல்வி நிறுவனங்கள் தகவல்களை வழங்கின. தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வந்த மாணவர்கள் மத்தியில் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு லேப்டாப், டேப், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.