வாழப்பாடியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Salem News Today: சேலம் அருகே ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.;

Update: 2023-05-01 12:40 GMT

கொள்ளை நடந்த தாசில்தார் வீடு.

Salem News Today: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள செல்லியம்மன் நகரில் வசித்து வருபவர் சின்னசாமி ( 63). இவர் வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாசில்தாராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி விஜயலட்சுமி.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு மனைவியை விட்டு விட்டு, சின்னசாமி நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரின் வீடு திறக்கப்பட்டு கிடந்துள்ளது.

இதனைப்பார்த்த சின்னசாமி அதிர்ச்சி அடைந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் இருந்து மர்ம நபர் ஓடி வந்தார். அவர், சின்னசாமி முகத்தில் துணியை போட்டு விட்டு, அங்கிருந்து ஓடினார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சின்னசாமி பிடிக்க முயன்றார். ஆனால் மர்ம நபர் தப்பியோடி தலைமறைவாகினர்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த ஏழரை பவுன் நகைகள் மற்றும் ரூ.1.10 லட்சம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. மேலும் பட்டுப்புடவை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வாழப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்கள் சேகரிப்பட்டன.

இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்த்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News