சேலம் ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் விசாரணை

Salem News Today - சேலம் ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-12 08:00 GMT

காட்டூர் ஆனந்தன்.

Salem News Today - சேலம் மாநகரின் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன். இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி, காட்டூர் ஆனந்த் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு, பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில் அங்கிருந்து காட்டூர் ஆனந்தன் திரும்பியுள்ளனர்.

அவர் காட்டூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்த போது, அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆனந்தன் மற்றும் பிரபாகரனை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

காட்டூர் ஆனந்தனின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து கார் மூலம் அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளனர். அவருடன் சென்ற அவரது உறவினர் பிரபாகரன் படுகாயமடைந்தார். காயமடைந்த பிரபாகரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட பிரபல ரௌடி காட்டூர் ஆனந்தன் மீது கொலை வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இது குறித்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் எம்.எம்.-8 கோர்ட்டில் ரவுடி ஆனந்தனின் சித்தப்பா மகன் அன்பழகன் மற்றும் அஜித்குமார், மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து சென்னை புழல்சிறையில் அடைத்தனர்.

அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காரிப்பட்டி போலீசார் முடிவெடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீசார் செய்து வருகிறார்கள்.

போலீசார் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில் ரவுடி ஆனந்தன் கொலை வழக்கு தொடர்பாக வலசையூரை சேர்ந்த சீனிவாசன் (35), வெள்ளியம்பட்டியை சேர்ந்த ராஜா (36) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் ஆனந்தன் மோட்டார் சைக்கிளில் வருவது குறித்த தகவலை அன்பழகன் தரப்பினருக்கு தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் வழிமறித்து வெட்டி கொலை செய்யும் போது அவர்கள் உடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைதான சீனிவாசன், ராஜா ஆகியோரை வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் காட்டூர் அருகே உள்ள வெள்ளியம்பட்டியை சேர்ந்த ஹரிசிவன் (25), அவரது தம்பி குழந்தைவேலு (23) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். ஆனந்தனை கொலை செய்த பிறகு இவர்கள் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து, அன்பழகன், மணிகண்டன், சக்திவேல், அஜித்குமார் ஆகிய 4 பேரும் தப்பிக்க உதவியாக இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News