சேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்
சேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் விமான நிலையத்தை 136 ஏக்கரில் இருந்து 566 ஏக்கராக விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது . இந்த விரிவாக்கப்பணியில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் ஓடுபாதை 6000 அடியில் இருந்து 8000 அடியாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நிலம் அளவீடு மற்றும் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இம்மாத இறுதியில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். விரிவாக்கப் பணியில் 4 சிறிய மற்றும் 2 பெரிய விமானங்களை நிறுத்தும் வசதி மற்றும் இரவு தரையிறங்கும் வசதி ஆகியவை அடங்கும்.