சங்ககிரி பேரூராட்சி சாா்பில் சமுதாய கூடத்தில் ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உணவு கூடம் திறப்பு விழா!

சங்ககிரி பேரூராட்சி சாா்பில் சமுதாய கூடத்தில் ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை, உணவு கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.;

Update: 2025-02-25 07:30 GMT

சேலம் : சங்ககிரி பேரூராட்சி சாா்பில் சமுதாய கூடத்தில் ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை, உணவு கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

புதிய கட்டடங்களை திறந்து வைத்த பிரமுகா்கள்

♦ மக்களவை உறுப்பினா்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்)

♦ வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்)

திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய வாகனங்கள்

பேரூராட்சி சாா்பில் 15ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு ரூ. 18.50 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட இரண்டு இலகுரக வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனா்.

புதிய சத்துணவு சமையல் கூடம் திறப்பு

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி திட்டத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சத்துணவு சமையல்கூடத்தையும் திறந்து வைத்தனா்.

இதில் பேரூராட்சித் தலைவா் எம்.மணிமொழிமுருகன், துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, நகரச் செயலாளா் கே.எம்.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News