சேலத்தில் சுகாதார ஆய்வாளர் சங்க ஆர்ப்பாட்டம்
மாற்றுப்பணி உத்தரவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் போராட்டம்;
சுகாதார ஆய்வாளர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் சேலம் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குனரின் ஊழியர் விரோத போக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது சுகாதாரத்துறை இயக்குனரின் வழிகாட்டுதல்களை மீறி மாவட்ட நிர்வாகத்தால் சுகாதார ஆய்வாளர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் மாற்றுப்பணி உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், 2021ல் முதலமைச்சர் அறிவித்த கொரோனா ஊக்கத்தொகையை விடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மணிவண்ணன் மற்றும் இணைச் செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.