சேலத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான (TNTET) இலவசப் பயிற்சி வகுப்புகள் துவக்கம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்விற்கான (TNTET) இலவசப் பயிற்சி வகுப்புகள் 24.08.2023 அன்று துவங்கப்படவுள்ளது.;
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்விற்கான (TNTET) இலவசப் பயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 24.08.2023 அன்று துவங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்விற்கான (TNTET) அறிவிப்பு வரும் டிசம்பர் 2023-ஆம் மாதம் வெளியிடப்பட உள்ளது. இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 24.08.2023 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 94990 55941 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.