ஜூன் 1 முதல் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

Salem News Today: சேலத்தில் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 1ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது.

Update: 2023-05-29 14:40 GMT

Salem News Today: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 1ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) காவல் சார்பு ஆய்வாளர் 621பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி (Station Fire Officer - SFO) 129 பணிக் காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 01062023 முதல் 30.06.2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01062023 அன்று முதல் துவங்கப்படவுள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 8012120115 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த காவல் சார்பு ஆய்வாளர், தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் https//formsgle/jEYiHi3ERZgsLCeCs என்ற Google Form Linkஇல் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News