50 பெண்களுடன் உல்லாசம்.. ஆபாச வீடியோக்களுடன் கைதான சாமியார்

கள்ளக்குறிச்சி அருகே பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50க்கும் மேற்பட்ட வீடியோக்களுடன் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-08-26 13:45 GMT

பைல் படம்

கள்ளக்குறிச்சி அருகே பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50க்கும் மேற்பட்ட வீடியோக்களுடன் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி மற்றும்  இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டின் அருகே அய்யனார் கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்த கோவிலில் சேலம் மாநகர் போயர் தெருவில் வசித்துவரும் முத்தையன் அடிக்கடி வழிபாடு செய்துவிட்டு செல்வது வழக்கம். மேலும் இவர் பில்லி, சூனியம் எடுப்பதிலும், பெண்களை வசீகரம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முந்தையனும் ஓட்டுநக்கும், முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி ஓட்டுநரின் பண நெருக்கடிக்கு அவரிடம் செல்லவேண்டி இருந்தது. இதனால் ஓட்டிநர் தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை ரூ.4 லட்சத்துக்கு முத்தையனிடம் கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஓட்டுநரின் குடும்பத்தினருடன் முந்தையனுக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால்  நாளடைவில் ஓட்டுநரின் மனைவிக்கும், முத்தையனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் ஓட்டுநருக்கு தெரியவரவே தனது மனைவிையும் முந்தையனையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து முத்தையனுடன் பழக்கம் தொடர்ந்தால் நம் குடும்பத்திற்குதான் ஆபத்து ஏற்பட்டுவிடும் என கருதிய ஓட்டுநர், சாமியார் முத்தையனுக்கு தரவேண்டிய ரூ.4 லட்சத்தை  வட்டியுடன்  கொடுத்து விட்டு தனது நிலத்தை திரும்ப தருமாறு ஓட்டுநர் கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தையன், உனது நிலத்தை திருப்பி கேட்டால் உன் மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் எனக் கூறி மிரட்டியும் உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சின்னசேலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார், முத்தையனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

முந்தையனிடம் நடத்தி தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் முத்தையனின் லேட்டாப்பை சோதனை செய்தனர். அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து முந்தையனிடம் இருந்த 5 செல்போன்கள், ஒரு லேப்டாப், 5 பென்டிரைவ் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சாமியார் முத்தையனை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News