சேலம் அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி

சேலம் அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் விருப்பத்தின்பேரில், அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2023-06-27 15:10 GMT

அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பங்களை பெறும் சேலம் அரசு கிளை அச்சக துணைப் பணிமேலாளர்.

சேலம் அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் விருப்பத்தின்பேரில், அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் அரசு கிளை அச்சக துணைப் பணிமேலாளர்  தனசேகரன் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசிதழில் பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்யும் நடைமுறை ஏற்கனவே, சென்னை, மதுரை மற்றும் திருச்சி மாவட்ட அரசு கிளை அச்சகங்களில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை மேலும் எளிமையாக்கும் வகையில் 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது  மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதற்காக, பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அறிவித்தார்.

அந்தவகையில், கடந்த 26.04.2023 முதல் சேலம் அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சேலம் அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழில் 81 விண்ணப்பங்களும், ஆங்கிலத்தில் 214 விண்ணப்பங்களும் மற்றும் மதம் மாறியவர்கள் பெயர் மாற்றத்திற்கு 9 விண்ணப்பங்களும் என மொத்தம் 304 விண்ணப்பங்கள் வரப்பெற்று, சரிபார்ப்பு செய்யப்பட்டு, கடந்த 02.06.2023 வரை ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்த 107 நபர்களுக்கும், தமிழில் பெயர் மாற்றம் செய்த 47 நபர்களுக்கும் மற்றும் மதம் மாறியவர்கள் பெயர் மாற்றம் செய்ய 4 நபர்களுக்கும் என மொத்தம் 158 நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்து அரசிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள், ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.350/- மற்றும் அஞ்சலகக் கட்டணமாக ரூ.65/- என மொத்தம் ரூ.415/-ம், தமிழில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.50/- மற்றும் அஞ்சலகக் கட்டணமாக ரூ.65/- என மொத்தம் ரூ.115/-ம் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் வங்கி ஆகிய ஏதேனும் ஒரு வங்கியில் e-Challan மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறப்படும்.

தமிழ்நாடு அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பத்துடன் தங்களுடைய பிறப்புச் சான்று நகல், பள்ளி அல்லது கல்லூரி இறுதி சான்று நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், நிரந்த கணக்கு எண் அட்டை நகல், ஓட்டுநர் உரிமம் நகல் மற்றும் கடவுச் சீட்டு ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க நகல் வேண்டும். மதம் மாறிய விண்ணப்பதாரர்கள் பெயர் மாற்றம் செய்திட மேற்கண்ட ஆவணங்களுடன் மதம் மாற்றச் சான்றுடன் இணைக்க வேண்டும்.

பெயர் மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு கிளை அச்சகம், சிட்கோ வளாகம், 5 ரோடு, சேலம் 636 004 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ அணுகி பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 0427 2448569 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சேலம் அரசு கிளை அச்சக துணைப் பணிமேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News