சேலத்தில் நாளை மகளிர் உரிமைத் திட்டத்திற்கான டெபிட் கார்டுகள் வழங்கல்

சேலத்தில் நாளை மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமைத் தொகையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கவுள்ளார்.;

Update: 2023-11-09 16:18 GMT

சேலத்தில் நாளை மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமைத் தொகையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கவுள்ளார்.

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தில் ஏற்கனவே 1,06,49,242 பேர் பயன்பெறுகின்றனர். இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 5:17 இலட்சம் மகளிர் பயன்பெற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சென்னைக்கு அடுத்து அதிகளவிலான மகளிர் சேலம் மாவட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.

மேலும், தற்பொழுது தமிழ்நாட்டில் 7,35,058 குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் நாளை முதல் வங்கி கணக்கில் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 13 இலட்சம் பயனாளிகள் பயன்பெறவுள்ளனர். சென்னை கலைவானர் அரங்கில் நாளை (10.11.2023) நடைபெறும் விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

அந்தவகையில்  சேலம், 5 ரோடு அருகில் உள்ள ஸ்ரீ ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நாளை பகல் 12.00 மணியளவில் நடைபெறும் விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான டெபிட் கார்டுகளை மகளிருக்கு வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உ றுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளது. மேலும், இவ்விழாவில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

Tags:    

Similar News