சேலத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டப்ப நாயக்கன்பட்டி கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டப்ப நாயக்கன்பட்டி கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர தலைவர் ஏ.ஆர்.பி. பாஸ்கர் தலைமையில் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மெடிக்கல் பிரபு, பச்சப்பட்டி பழனி, திருமுருகன், மாநில சேவாதள பிரிவு வெங்கட்ராஜ், மாநில வக்கீல் பிரிவு பொதுச்செயலாளர் தேன்மொழி பிங்கி, கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராம கமிட்டி தலைவர் காமராஜ், மண்டல தலைவர்கள் ராமமூர்த்தி, சாந்தமூர்த்தி, நிசார் அஹமது, மோகன், ராமன், நாகராஜ் கோவிந்தராஜ், மாநகர செயலாளர் சஞ்சய் காந்தி, சுப்பிரமணியன், ஆரோக்கியநாதன் இளைஞர் காங்கிரஸ் அம்மாபேட்டை கோவிந்தன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.பாலப்பட்டியில் உள்ள கனரா வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் மாநகர தலைவர் பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச் செயலாளர் எம்.ஆர். சுரேஷ், மாநில செயலாளர் வசந்தம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக நூதன முறையில் சட்டி ஏந்தி 100 நாள் வேலை திட்டத்தை முடக்காதே என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பொதுக்குழு உறுப்பினர் தனசேகர், மணி, காளியண்ணன், அல்லிகுட்டை ராமசாமி, ராமநாதன், குணாலினிசக்தி, கதிரவன், வரதராஜ், ஏழுமலை, பிரகாஷ், பூபதி, சேட்டு, ரஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.