சேலத்தில் போலீசார் தாக்கியதில் மரணம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

சேலம் சோதனைசாவடியில் போலீசார் தாக்கி ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்;

Update: 2021-06-23 08:12 GMT

கைது (பைல் படம்)

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரும், அவரது நண்பர்கள் இரண்டு பேரும் நேற்று, கள்ளக்குறிச்சி, வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்திவிட்டு, கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர். அப்போது, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்.ஐ மற்றும் உடனிருந்த போலீசார், போதையில் இருந்த முருகேசனை தாக்கியுள்ளனர். அதில் முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

முருகேசனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. விசாரணை மேற்கொண்டார். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார். 

Tags:    

Similar News