தலைவாசல் அருகே விபத்து! உதவி ஆய்வாளர் பலி!
Salem Accident News-சேலம் அருகே தலைவாசல் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உதவி ஆய்வாளர் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Salem Accident News-சேலம் அருகே தலைவாசல் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உதவி ஆய்வாளர் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைவாசல் அருகே நாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு. 54 வயதான இவர் ஆத்தூர் கிராமப்புற காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி. இவர்களுக்கு பிரவீன், பிரகதீஷ்வரன் ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரவீன் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். தலைவாசல் வந்து இறங்கிய அவரைக் கூப்பிட்டுச் செல்ல வருமாறு தன் தந்தையை அழைத்துள்ளார்.
மகனை அழைத்துச் செல்ல வந்த செல்வராசு மோட்டார் சைக்கிளில் தலைவாசலுக்கு வந்திருக்கிறார். மகன் தனக்காக காத்திருந்ததையடுத்து அவரை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்றுகொண்டிருக்கிறார். அதிகாலை 5.30 மணி அளவில் நடுமேடு வழியாக நாவலூர் அருகே சென்றபோது பூனை ஒன்று குறுக்கே ஓடியதாக கூறப்படுகிறது.
வேகமாக சென்று கொண்டிருந்த சமயத்தில் பைக்கின் குறுக்கே ஏதோ ஒன்று செல்ல அதில் நிலைதடுமாறிய செல்வராசு பைக்கை மேற்கொண்டு செலுத்த முடியாமல் கீழே விழுந்தார். அவருடன் அவர் மகனும் கீழே விழுந்த நிலையில் படுகாயமடைந்தார்.
எஸ்ஐ செல்வராசு உடனடியாக மீட்கப்பட்டு கோவையில் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராசு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தலைவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2