சமுதாய அமைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரிய சமுதாய அமைப்பாளர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-08-20 04:06 GMT

பைல் படம்

சேலம் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரிய சமுதாய அமைப்பாளர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவிதெரிவித்ததாவது:

சேலம் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் எடப்பாடி, மேட்டூர் மற்றும் நரசிங்கபுரம் ஆகிய நகராட்சி பகுதிகளில் பணிபுரிய மூன்று சமுதாய அமைப்பாளர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் சமுதாய அமைப்பாளர்களுக்கான தகுதிகள் வயது வரம்பு 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி (MS Office) திறன்களுடன் நல்ல பேச்சுத்திறன் (Communication Skills) இருத்தல் வேண்டும்.

களப்பணியில் ஓராண்டு முன் அனுபவம், கணினியில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக இருத்தல் வேண்டும். (பகுதி அளவிலான கூட்டமைப்பு தீர்மானம் இணைக்க வேண்டும்.) பொதுமக்களுடன் நல்ல முறையில் பேச்சுத்திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். சேலம் மாவட்டத்திற்குள் இருப்பிடம் இருத்தல் வேண்டும் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக TNSRLM / புதுவாழ்வுத் திட்டம் / IFAD திட்டம் மூலம் நீக்கப்பட்டவராக இருத்தல் கூடாது. தேர்ந்தெடுக்கப்படும் சமுதாய அமைப்பாளர்கள் வெளிச்சந்தை முறையில் மேற்படி, பணியிடத்திற்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் நகர்ப்புர வாழ்வாதார மையம், அறை மூலமாகவோ மேலாளர், சூரமங்கலம் எண்:207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் – 636 001 என்ற முகவரிக்கு 30.08.2024 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கை

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

2024-ஆம் ஆண்டிற்கான நேரடிச் சேர்க்கை (Spot Admission) 16.08.2024 முதல் 31.08.2024 வரை நடைபெறவுள்ளது. நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 85266 39467, 99427 12736, 99441 09416 மற்றும் 98432 75111 என்ற எண்களை தொடர்பு கொண்டு முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இயந்திர வேலையாள், இயந்திர வேலையாள் (அரவை), கடைசலர் மற்றும் கோபா, இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் போன்ற பிரிவுகளில் உள்ள காலி இடங்களுக்கு 10 -ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நேரடிச் சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி, E-mailid, ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதிச் சான்றிதழ் (அசல்), வங்கிக் கணக்கு விபரம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணமாக ஓர் ஆண்டுக்கு ரூ.235/- மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.245/- ஆகும்.


பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750/-, பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக் கருவி, காலணி, போன்ற விலையில்லா பொருட்களும் பஸ்பாஸ் மற்றும் புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கும் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கும் மாதந்தோரும்ரூ.1,௦௦௦ உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News