சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம், சூரமங்கலம் செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் சேலம், சூரமங்கலம், ஜங்சன் அருகில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 1.அறிவியல் 2.வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய கல்வி தகுதியுடன் Senior Diploma in Teaching for HI Or B.Ed (Special Education) மற்றும் துணை விடுதிக் காப்பாளர் பணியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சியுடன் Junior Diploma in Teaching For HI Or D.Ed., (Special Education) உரிய கல்வி தகுதியுடன் முற்றிலும் தற்காலிகமான பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இங்கு நியமிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த மதிப்பூதியமாக ரூ.15,000/- மற்றும் துணை விடுதிக் காப்பாளருக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய கல்வி சான்றிதழ்களுடன் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, சீனிவாசா காலனி, சூரமங்கலம் (உழவர் சந்தை அருகில்) சேலம் 636005 என்ற முகவரியில் 20.01.2024 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதேபோல் செவ்வாய்பேட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் செவ்வாய்பேட்டையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நான்கு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உரிய கல்வி தகுதியுடன் முற்றிலும் தற்காலிகமான பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இங்கு நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு D.T.Ed., and Junior Diploma in Teaching For VI Or D.Ed., (Special Education) என்ற கல்வித் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாதாரண நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
எனவே, மேற்காணும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய கல்வி சான்றிதழ்களுடன் பார்வைத்திறன் தலைமை ஆசிரியை, குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி, செவ்வாய் பேட்டை, சேலம் 636 002 என்ற முகவரியில் 20.01.2024 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.