மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Unique Disablity ID Card) விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத பயனாளிகள் மாற்றுத்தினாளிகள் அடையாள அட்டை. ஆதார் அட்டை மற்றும் மார்பளவு புகைப்படத்துடன் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். அறை எண்.11. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் 636 001 அவர்களை 0427 2415242 மற்றும் 94999-33489 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.