தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
Salem News Today: சேலம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Salem News Today: சேலம் மாவட்டத்தில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
2023 - ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கீழ்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெல்டர், வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், AC மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள Technology centre 4.0 ல் 1.Manufacturing Process control & Automation 2. Industrial Robotics & Digital Manufacturing 3.Mechanic Electric Vehicle 4.Advanced CNC machining technician போன்ற பிரிவுகளுக்கு 10 -ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் கைபேசி எண், மின் அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- மட்டும்.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களின் மூலம் Campus Interview மூலம் வேலை பெற்றுத்தரப்படும். 07.06.2023 அன்று வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.