மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.;
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் இளங்கோவன். சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள இளங்கோவன் வீடு கல்வி நிறுவனம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் பண மதிப்பு இழப்பின்போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்துள்ளார்.
தேர்தலின் போது ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலதுகரமாக இருந்தவர். அதிமுகவில் மிக முக்கிய பிரமுகராக செயல்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் மீது 2014-2020 இடைப்பட்ட ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக ₹.3.78 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.