சேலம்: முன்னாள் மாணவர் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விருந்து..!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கோணகபாடி கிராமம் கே. ஆர். தோப்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் 60-ம் ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-25 09:50 GMT
சேலம்: முன்னாள் மாணவர் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விருந்து..!
  • whatsapp icon

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கோணகபாடி கிராமம் கே. ஆர். தோப்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் 60-ம் ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இந்த பள்ளியின் மூத்த முன்னாள் மாணவர்களான பாரத ரிசர்வ் வங்கி பொது மேலாளர் வெங்கடாசலம், ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், முன்னாள் நபார்டு பொது மேலாளர் அர்த்தனாரீஸ்வரர், மகேந்திரா நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி புகழேந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து பள்ளியின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

அப்போது பள்ளி மாணவ-மாணவிகள் 1,500 பேருக்கும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் தனது சொந்த செலவில் அறுசுவை உணவு வழங்கிய முன்னாள் மாணவர் கவுன்சிலர் ராஜா என்பவருக்கு பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

Similar News