சேலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை துவக்கம்

Salem Airport: சேலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நேற்று விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-17 05:59 GMT

சேலம் விமான நிலையத்தில் துவங்கிய விமான சேவை.

Salem Airport: சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூ ஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது.

இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வந்தார்.

இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதுடன், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கையை வைத்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று பெங்களூர் - சேலம் : 12.40-01.40 மணிக்கும், சேலம் - கொச்சி : 02.05-03.15 மணிக்கும், கொச்சி - சேலம் : 03.40-04.50 மணிக்கும், சேலம் - பெங்களூர் : 05.15-06.15 மணிக்கும் விமான சேவைகள் துவங்கின.

பெங்களூரில் இருந்து சேலம் விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து சேலம் விமான நிலையத்திலிருந்து கொச்சின் புறப்பட்ட விமானத்திற்கு கொடிய சுற்றி வைத்தும் விமான சேவையை தொடங்கி வைத்தனர். 

சேலம் விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது விமான சேவை தொடங்கியுள்ளதால், சேலம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த விமான சேவையை அருகில் உள்ள மாவட்டங்களான  தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி  சேர்ந்த பயணிகளும் இந்த விமான சேவையை வரவேற்றுள்ளனர்.

Tags:    

Similar News