வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு கூட்டம்

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.;

Update: 2025-02-27 09:50 GMT

சேலம் : வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.

வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கூறியதாவது:

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், நீலகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்ட விவசாயிகளிடம் வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 4 வேளாண் நிதிநிலை அறிக்கைகளும் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பிறகே தாக்கல் செய்யப்பட்டன.

மதிப்புக் கூட்டிய பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல்

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி லாபகரமான முறையில் சந்தைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள்

இதற்காக விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகள், வேளாண் இயந்திரமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்யும் வகையில் அரசால் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 5,542 கோடி நிவாரண உதவித்தொகையை எவ்வித நிலுவையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளையும் சிறப்பு வாய்ந்த 30 பொருள்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டுள்ளன.

கூட்டத்தில் கலந்து கொண்டோர்

கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் வி. தட்சிணாமூர்த்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் டி.ஆபிரகாம், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News