48 நரிக்குறவர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கல்

TN Land Patta Chitta -ஆரூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் 48 நரிக்குறவர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.;

Update: 2022-11-11 03:36 GMT

ஆரூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் 48 நரிக்குறவர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

TN Land Patta Chitta -சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆரூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் 48 நரிக்குறவர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருவாரூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் 400 குடும்பங்கள் வசிக்கும் வகையில் நரிக்குறவர் இன மக்களுக்காக கலைஞர் வீடுகள் கட்டிக்கொடுத்தார். இன்றளவும் அவர்கள் அனைவரும் அதே இடத்தில் நல்ல பொருளாதார முன்னேற்றத்துடன் பொறியாளர்களாகவும், பல்வேறு வேலைவாய்ப்புகளிலும் பணியாற்றி வசித்து வருகின்றனர்.

அதேபோல், தமிழக முதல்வரும் தற்பொழுது சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்தவரின் வீட்டிற்குச் சென்று உணவு அருந்தி குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தார் சாலை அமைத்துக் கொடுத்தார்.

ஆரூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாரமங்கலம் குறுவட்டம், ஆரூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் 48 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.22.50 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ. 18.08 இலட்சம் மதிப்பில் தார் சாலைப் பணிகள், ரூ. 8.50 இலட்சம் மதிப்பில் 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ரூ. 38.14 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் கழிவுநீர் கால்வாய், ரூ.260 இலட்சம் மதிப்பில் செங்குத்து உறிஞ்சுக்குழி, ரூ.13.57 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், ரூ.5.25 இலட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம், ரூ.17.60 இலட்சம் மதிப்பில் சிறிய பாலம், ரூ.19.20 இலட்சம் மதிப்பில் பல்நோக்குக்கூடம், ரூ.4.00 இலட்சம் மதிப்பில் தெருக்களில் விளக்கு வசதி, ரூ.6.00 இலட்சம் மதிப்பில் பூங்கா , ரூ.4.00 இலட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் என ரூ.1.37 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நரிக்குறவர் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். எனவே, விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களைப் பெற்ற அனைவரும் அரசால் வழங்கப்படும் இந்நலத்திட்ட உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற வேண்டும். இவ்வாறு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தாரமங்கலம், பாப்பம்பட்டி ஊராட்சி, தச்சான்காட்டூர் பகுதியில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் 244 புதிய வீடுகளுடன் மறுவாழ்வு முகாம் கட்டடப்பட்டுவரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் ஆதணிகாஜலம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆரூர்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் வீரம்மாள் காங்கேயன் உட்பட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News