tomato price: சேலத்தில் 14 நியாய விலைக்கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை துவக்கம்

tomato price: சேலத்தில் 14 நியாய விலைக்கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனையை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2023-07-11 11:02 GMT

tomato price: சேலத்தில் நியாய விலைக்கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனையை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

tomato price:சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 14 நியாய விலைக்கடைகளில் முதற்கட்டமாக மலிவு விலையில் தக்காளி விற்பனையினை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் இன்று (11.07.2023) தொடங்கி வைத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன்,  இன்றைய தினம் முதல்கட்டமாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தில்லை நகர், மாவட்ட ஆட்சியர் வளாகம், டாக்டர்.சுப்பராயன் சாலை, சுப்பரமணிய நகர், பிடாரி அம்மன் கோவில் வீதி, புது திருச்சி கிளை சாலை, தாதம்பட்டி, திருவாக்கவுண்டனூர், சீரங்கப்பாளையம், தேவாங்கப்புரம், சாமிநாதபுரம், ஜவகர் மில் காலனி, ஸ்வரணபுரி மற்றும் மெய்யனூர் 14 நியாய விலைக்கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60/- என்று தமிழ்நாடு அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

tomato price in india

சேலம் மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் நுகர்வோர்களும் விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காய்கறிகளை அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை பதுக்கல் செய்வோர் மீது அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்படுள்ளது. இவ்வாறு சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News