சேலத்திற்கு இன்று வருகிறார் ராஜ்நாத் சிங்

Update: 2021-02-21 05:02 GMT

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞர் அணி மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு வருகின்றனர். இதில் சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞர் அணி மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். அவர் தனி விமானம் மூலம் சேலம் வரும் நிலையில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News