அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்..!

இந்த மாதம் சம்பளம் அக்டோபர் 28ல் வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-16 01:00 GMT

தீபாவளி -கோப்பு படம் 

வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தற்போது வெளியாகி உள்ளது. பண்டிகை காலத்திற்காக இந்த மாத சம்பளம் அக்டோபர் 28 ஆம் தேதி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்திற்குப் பிறகு இரட்டை மகிழ்ச்சி கிடைக்க உள்ளது. அரசு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அகவிலைப்படி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இது தீபாவளிக்கு முன்பே அகவிலைப்படி உயர்வை கொடுக்கும். தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் மாதத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும். பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி ஏன் என்றால், தீபாவளிக்கு முன்பே 4% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

தீபாவளியை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 28 ஆம் தேதி சம்பளம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மட்டுமல்லாமல், மருத்துவச் செலவுத் தொகையும் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவச் செலவுகளுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News