சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்வர்

சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.;

Update: 2021-10-26 17:06 GMT

தீவிபத்து ஏற்பட்ட கடை-  மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News