Rs 1,200 crore fraud on soldiers- ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி; வெளிநாடு தப்பிச் செல்லும் போது சிக்கிய தனியார் நிறுவன இயக்குநர்

Rs 1,200 crore fraud on soldiers- ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-11-25 11:45 GMT

Rs 1,200 crore fraud on soldiers- கைது செய்யப்பட்ட தனியார் நிறுவன இயக்குநர் நவீன்குமார்.

Rs 1,200 crore fraud on soldiers, A director of a private company caught while fleeing abroad- ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு முனிசிபல் காலனியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2 தவணையாக ரூ.9 ஆயிரம் வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.18 ஆயிரம் என கணக்கிட்டு ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பி வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு கவர்ச்சி விளம்பரம் செய்தனர்.

இதை நம்பி முன்னாள் ராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்தனர். இரண்டு ஆண்டாக பணம் தராததால், முதலீடு செய்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு, ஈரோடு ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் அறிவுரையின்படி, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முதலீட்டாளர்களின் புகார்களின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், 22 பேர் மட்டுமே ரூ.30 கோடி அளவுக்கு முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தற்போது ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பெயரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனியார் நிறுவனத்தின் இயக்குனரான நவீன்குமார் என்பவரை தேடி வந்தனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், நவீன்குமார் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருப்பதாக ஈரோடு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற குற்றப்பிரிவு போலீசார் நவீன்குமாரை கைது செய்தனர். பின்னர், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News