அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்த அரசு திட்டம்?

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக உயர்த்த உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.;

Update: 2024-08-06 07:42 GMT

அரசு பணியாளர்கள் (கோப்பு படம்)

நிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வுவதை 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தியது. அதிமுக அரசை விட மிக மோசமான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறையிலும் திமுக அரசு சிக்கி இருப்பதாக தெரிகிறது.

இதனால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா என கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெற அனுமதிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. இவர்களெல்லாம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு பென்ஷன் வழங்க சுமார் 300 கோடி தேவை. மேலும் புதிதாக ஆட்களை நியமனம் செய்யும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கிட்டத்தட்ட 600 கோடி தேவை ரூபாய் தேவைப்படும்.

ஆக சுமார் 19,000 கோடி தேவை. அதனால் ஓய்வு பெற அனுமதிக்காமல் இரண்டு ஆண்டுகளுக்கு வயதை உயர்த்தி விட்டால் வருடத்திற்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க 600 கோடி தான் தேவைப்படும். அதே சமயம் ஆண்டுக்கு சுமார் 18,400 கோடியை இரண்டு ஆண்டுகளுக்கு 36 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசு செலவினத்தை தவிர்க்க முடியும் அதனால் ஓய்வு பெறும் வயதை உயர்த்தலாமா என ஆலோசித்திருக்கிறது தி.மு.க அரசு.

இந்த தகவல்கள் எந்த அளவு உண்மை என்ற விவரங்கள் எல்லாம் வரும் நாட்களில் தெரியவரும். இப்போதைய சூழலில் இது பற்றி யாராலும் உறுதியாக கூற முடியாத நிலை தான் உள்ளது.

Tags:    

Similar News