முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என கேரள பஞ்சாயத்தில் தீர்மானம்
Mullaperiyar Dam News -முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என கேரள மாநில பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.;
Mullaperiyar Dam News - இடுக்கி மாவட்டம் வெள்ளியமட்டம் பஞ்சாயத்தில், 'முல்லைப்பெரியாறு அணையினை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:
கேரள விஷமி ரசல்ஜோய் பேச்சை கேட்டு இடுக்கி மாவட்டத்தில் உள்ள வெள்ளியமட்டம் பஞ்சாயத்து, கூட்டத்தில் 'முல்லைப்பெரியாறு அணையினை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இப்படியே சில பஞ்சாயத்துக்களுக்கு தொடரும். எனவே இந்நிலை நீடிப்பது இருமாநில உறவுகளை நிச்சயம் பாதிக்கும்.
எனவே இதற்கு மாற்றாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பதிலடி தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதாபுரம் மாவட்டங்களில் உள்ள அத்தனை கிராம பஞ்சாயத்துக்களிலும், 'முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2