தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்ததற்கான காரணங்கள் என்ன?
கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளதற்கான காரணம்?
தமிழகத்தில் நடந்த இரட்டை பேரழிவு வருவாய் மற்றும் வளர்ச்சியை பாதித்தது. குறிப்பாக மிக்ஜாம் புயல் மற்றும் அதீத மழையால் தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம். இந்த இரட்டை பேரழிவுகளை தமிழ்நாடு சந்திக்க நேரந்தது.
மேலும், ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதன் மூலம் மாநிலத்திற்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 20,000 கோடி.
CMRL கட்டம் -II மெட்ரோ ரயில் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் தராததால், தமிழ்நாடு மட்டுமே மெட்ரோ ரயில் பணிக்கான முழுச் செலவிற்கும் நிதியளிக்க வேண்டும். அதன்காரணமாக இந்தாண்டு ரூ. 9000 கோடி மற்றும் அடுத்த ஆண்டு ரூ 12000 கோடி தமிழக அரசு அதிகம் செலவு செய்ய வேண்டும்.
மேலும், தமிழக அரசு கடன் வாங்குவதில் மத்திய அரசின் கடுமையான மற்றும் நிபந்தனைகளால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்தாண்டு ரூ. 17,117 கோடியும் அடுத்த ஆண்டு ரூ. 14,442 கோடியும் அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
TANGEDCO க்கு கொடுக்கப்பட்ட இந்தத் தொகையை கழித்துவிட்டால் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.27,790 கோடி மட்டுமே. இது நம் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டதை விட குறைவானதே.
அடுத்த ஆண்டில், TANGEDCOவுக்கு நஷ்ட நிதியாகக் கொடுக்கப்படும் தொகையை விலக்கினால் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.34,837 கோடி இது கடந்த ஆண்டை விட குறைவானதே.
எனவே தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமே மத்திய அரசு தமிழகத்திற்கான நிதியை சரிவர ஒதுக்காதது, TANGEDCO கடன் வாங்கும் அளவை முறையற்று குறைத்தது, gst இழப்பீட்டினை நிறுத்தியது இவை தான் தற்போதைய வருவாய் பற்றாக்குறையை அதிகரித்துள்ளது என தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து தி.மு.க., நிர்வாகிகள் பலர் கூறி வருகின்றனர்.