தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் வரும் 5ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-11-01 04:08 GMT

ரேசன் கடை (கோப்பு படம்)

தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும். அனைத்து நாட்களிலும், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்கப்படும்.. தீபாவளிக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News