ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.;

Update: 2022-02-27 13:27 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

ராணிப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

  • whatsapp icon

ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி இன்று ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

இதனை தொடர்ந்து இரண்டு 108 ஆம்புலன்ஸ் புதிய வாகனத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து முகாம் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சுங்கச் சாவடிகளிலும், அனைத்து பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப் பகுதிகளிலும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News