இளம் வயதில் ஒன்றிய கவுன்சிலரான பட்டதாரி பெண்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட இளம் வயது பட்டதாரி பெண் வேட்பாளர் வெற்றிப் பெற்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் பூட்டுத்தாக்கு காமராஜர் தெருவை சேர்ந்த இளவழகன் மகள் தீபிகா வயது இருபத்தி ஒன்னு ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாவது வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டார். அவர் வெற்றியும் பெற்றார்.
மேல் விசாரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்ற இவர் குறைந்த வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர் ஆவார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது என்னுடைய தந்தை இளவழகன் 2011 முதல் 2011ஆம் ஆண்டு வரை அரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்தார். அப்போதே எனக்கு எனது தந்தையை போல் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டது.
மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதே என் லட்சியம் என்று தெரிவித்தார் இளம் வயதில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தீபிகாவுக்கு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர