இராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவினர் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்;

Update: 2022-02-22 10:36 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில உள்ள நகராட்சிகள் பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றவர்வள் அமைச்சர் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரகோணம் நகராட்சியில் பதிவான வாக்குகளை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும் மற்ற நகராட்சிகளின் வாக்குகள் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது .

அதில் அரக்கோணத்தில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக-24 அதிமுக -8, சுயேச்சை,- 2,அமமுக-1,காங்கிரஸ்-,1 வார்டிலும்

ஆற்காடு திமுக -18,அதிமுக -4, பாமக-3, விசிக-2 சுயேச்சை-3

வாலாஜாப்பேட்டை 24ல் திமுக -15, அதிமுக -6, பாமக-1, பாஜக-1, விஜய்மக்கள் இயக்கம் -1,

சோளிங்கரில் திமுக-15, காங்கிரஸ்-4, அமமுக-4, பாமக-2,அதிமுக-1, சுயேச்சை-1

மேல்விஷாரம் நகராட்சியில் ,திமுக-15, அதிமுக-2, பாமக-2,விஜய்மக்கள் இயக்கம்-1,சுயேச்சை-1

இராணிப்பேட்டையில் திமுக- 25,அதிமுக-4,சுயேட்சை-1 என அனைத்து நகராட்சிகளும் திமுக வெற்றிபெற்றுள்ளது.

பேரூராட்சிகள்

காவேரிப்பாக்கம், திமுக -8, அதிமுக-4, சுயேச்சை-1, காங்கிரஸ்-1

பணப்பாக்கம், திமுக-8, காங்கிரஸ்3, சுயேட்சை-2, அதிமுக-1 விசிக-1

திமிரியில்திமுக-9, சுயேச்சை-3, அதிமுக-2,

மற்றும் தக்கோலத்தில்திமுக-7,அதிமுக-6, பாமக-1,சுயேட்சை-1 சுயேச்சை- 1 ஆகியவற்றில் திமுகவும்

கலவைப்பேரூராட்சியில் மட்டும் அதிமுக-8, திமுக-7 அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

இருப்பினும் மற்றவைகளான நெமிலியில் திமுக-5,அதிமுக-6, சுயேட்சை-3பாமக-1,

அம்மூரில் திமுக-6,அதிமுக-6,பாமக-2, சுயேட்சை-1 மற்றும்

விளாப்பாக்கத்தில் திமுக-7, சுயேட்சைகள்-5, அதிமுக-3 என வெற்றி பெற்றநிலையில் இம்முன்று பேரூராட்சிகளில் திமுக, அதிமுகவுக்குமிடையேஇழுபறியான சூழல் ஏற்பட்டுள்ளது..

மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்பத்திலிருந்த திமுகவுக்கு வெற்றிகள் குவிந்ததால் அருகே திரன்ட திமுகவினர் வெற்றிக்களிப்பில் பட்டாசு வெடித்து ஆராவரம் செய்தனர்.

Tags:    

Similar News