கலவகுண்டா அணைதிறப்பு: பொன்னை ஆறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பொன்னையாறு, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கலெக்டர் உத்தரவு
ஆந்திர மாநிலம் சித்தூர்மாவட்டம் திருப்பதி உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழைப்பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமானது. அதன் காரணமாக, சித்தூர் அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கலவகுண்டா அணை நிரம்பி வழிந்து வருகின்றது .
எனவே அணை திறக்கப்பட்டு சுமார் மணிக்கு,4500 கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறந்து வெளியேற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வேலூர் மாவட்டம் பொன்னையடுத்துள்ள அணைக்கட்டிற்கு பெருக்கெடுத்து நீீீரை அங்கிருந்து இராணிப்பேட்டை மாவட்டம் ராமாபுரம் ஆற்றுக்கால்வாய் வழியாக 1500கன அடி நீர் சோளிங்கர், அரக்கோணம், வாலாஜா வட்டாரங்களிலுள்ள ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது .
மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணைக்கட்டிலிருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி பாலாற்றில் கலந்து வருகிறது.
இதனால், மாவட்டத்தில் உள்ள இரு ஆறுகளின் கரையோரம் கிராமங்களான
1.மருதம்பாக்கம்
2.ஏகாம்பரநல்லூர்
3.கொண்டகுப்பம்
4.சீக்கராஜபுரம்
5.நரசிங்கபுரம்,
6.லாலாப்பேட்டை,
7.தெங்கால்
8.காரை
9.திருமலைச்சேரி,
10.பூண்டி
11.குடிமல்லூர்
12.சாத்தம்பாக்கம்
13.விசாரம்
14.ஆற்காடு
15.சக்கரமல்லூர்
16.புதுப்பாடி
ஆகியவற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிளிலிருந்து மக்கள், பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.