கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் விஏஓவை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தும் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது.;

Update: 2021-11-23 05:00 GMT

போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபர் முகுந்தன்.

கலவைடுத்த வேம்பியில் கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து, ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலூக்காவைச் சேர்ந்த வேம்பியில் பொதுமக்கள் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது. அதில், திமிரி வட்டார மருத்துவர் ராஜேஷ், செவிலியர்கள் கலா, சித்ரா, சாந்தி,  மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கீதா, ஆகியோர் கிராமத்தில் வீடு வீடாகச் பொதுமக்களுக்கு தடுப்பூசிப் போடும் பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது, அதேபகுதி இந்திராநகரைச் சேர்ந்த முகுந்தன்(21) என்ற வாலிபர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் விஏஓ கீதா தடுப்பூசி போடவில்லை என்றால் போட்டுக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், விஏஓ வை ஆபாசமாக பேசியும் அங்கு மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போடுவதை தடுத்துள்ளார்.

இதுகுறித்து விஏஓ கீதா கலவைப் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்தப் போலீசார். முகுந்தனைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News