ஆற்காட்டில் தியான யோக ஆலயத்தில் யோகா தின சிறப்பு விழா மாணவர்கள் அசத்தல்
ஆற்காடு அடுத்த மேலகுப்பம் இராமர் கோயில் திடலிலுள்ள தியான யோகா ஆலயத்தில் யோகா தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது;
இராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பம் இராமர் கோயில் திடலில் நடந்த தியான யோகாலயம் நடத்திய சர்லதேச யோகாதின விழாவில் யோகா ஆசிரியர் ஸ்ரீ வேதாத்திரியன் தலைமை தாங்கினார். ஆலய நிர்வாகி கந்தசாமி முன்னிலை வகித்தார். யோகா மாணவர் ராஜ்குமார் வரவேற்றார்.
யோகா வகுப்பு மாணவர்கள் யோகாசனங்கள் குறித்தும் நன்மைகளை விவரித்ததாவது:
எல்லா வயதினரும் செய்யும் எளிமையானதாகும் மனவளர்ச்சி,உடல் வளர்ச்சியினை சீராக்கும், இரத்த மண்டலம், நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம் மற்றும் சுவாச மண்டலத்தை சீராக இயங்க வைத்து தேகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகாசனம் அவசியமே. அதேபோல நாளமில்லலா சுரப்பிகளை சீரமைத்து நரம்பு மண்டலத்தை ஊக்கப்படுத்த பெரிதும் யோகாசனங்கள் உதவுகின்றன. மேலும் யோகாசனங்கள் உடல் ,உயிர்,மனம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் இயக்க வைப்பதிலும் மனித ஆன்மா பரிபூரண நிலையை அடைய யோகாசனங்கள் முக்கிய இடத்திலிருந்து நம்மை வாழ்வித்து வருகிறது என்று பேசினர்.
மேலும் யோகாசனத்தில் முக்கியமானதாக விளங்கும் சூரிய நமஸ்காரத்தினைப் பற்றியும் அதனை செய்வதால் பெறும் நன்மைகளைப் பற்றியும் விழாவில் பேசினர். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த சிறுமி அத்வைத்ரா தேவி, புஷ்பாஞ்சலி பரதநாட்டியம் மற்றும் யோகாசனங்களையும் செய்து காட்டி அனைவரையும் கவர்ந்தார்.
பின்னர் விழாவில் கலந்து கொண்ட மாணவ,மாணவியர் அனைவரும் தாடாசனம், திரிகோணாசனம், சூரிய வணக்கம், சுபி, லிங்க முத்திரை யோகாசனங்களை செய்தனர். விழாவில் சிறப்பாக யோகாசனங்களை செய்து அசத்திய சிறுவர், சிறுமியர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் பரிசுப் பொருட்களை வேலூர் பசுமை பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேந்திரன், சமூக சேவகர் வாசுதேவன் மற்றும் யோகா ஆசிரியர் சரவணன் பரிசுகளை வழங்கினார்கள்
இதனையடுத்து அனைத்து யோக மாணவர்களுக்கு மரக்கன்றுகள்,பொது அறிவுப்புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினர். விழா ஏற்பாடுகளை தாமோதரன், சீனிவாசன்,லோகு, உமாபதி சரவணன் நடராஜன் ஆகியோர் செய்தனர்