குட்டையில் துணி துவைத்தபோது நீரில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ரத்தினகிரி நந்தியாலத்தில் உள்ள கல்குவாரி குட்டை நீரில் முழ்கி பெண் உயிரிழந்தார்.;

Update: 2021-10-22 09:37 GMT

இராணிப்பேட்டை மாவட்டம்,  ரத்தினகிரி அடுத்த நந்தியாலம் அருகே குறிஞ்சி நகர் பகுதியில்,   கைவிடப்பட்ட நிலையில் கல்குவாரி குட்டை உள்ளது. அதில், அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்பவர் துணி துவைப்பதற்காக சென்றார். இரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை .

அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர்,  இந்திராவை இரவு முழுவதும் தேடிவந்துள்ளனர். இருப்பினும்  கிடைக்கவில்லை. ரத்தனகிரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின்பேரில் தேடிவந்த போலீசார் அங்குள்ள கல்குட்டையில் தேட,  ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். .

தீயணைப்பு மீட்பு படையினர், கல்குட்டையில் இந்திராவைத் தேடும்பணியில் பணியில் ஈடுபட்டனர் . சுமார்4 மணிநேர தேடுதலுக்குப் பிறகு, குட்டையில் இருந்து சடலமாக இந்திரா மீட்கப்பட்டார். அவரது உடல்,  பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இரத்தினகிரி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News