ஆபத்தான நிலையில் தரைபாலத்தைக் கடக்கும் கிராம மக்கள்

கலவையடுத்த தென்னலேரியருகே வெள்ளநீர் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், கயிற்றைப்பிடித்து ஆபத்தான முறையில் பாலத்தை கடக்கும் மக்கள்

Update: 2021-11-12 16:23 GMT

தரைப்பாலத்தில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பாலத்தை கடக்கும் கிராம மக்கள் 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் .அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கனமழைப் பெய்து வருகிறது. இதன்காரணமாக பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. அதனைத்தொடர்ந்து கலவையடுத்த தென்னலேரி கிராம ஏரி நிரம்பி உபரிநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெளியேறி வருகிறது.

உபரிநீரானது பள்ள நாகலேரி கிராமத்தையொட்டியுள்ள தரைபாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் அவ்வழியாக அரும்பாக்கம், மூஞ்சிர்பட்டு, சிறுவஞ்சிப்பட்டு ராத்தம், நாட்டேரி, பிரம்மதேசம், தண்ணீர்பந்தல், மேச்சேரி,ஜிபிநகர், ஓம்சக்திநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மேற்படி தரைப்பாலத்தினை கடக்கமுடியாமல் பெரும் அவதியுற்று வருகின்றனர்.

மேலும் மாற்றுப்பாதையாக சுமார் 20கிமீக்குமேல்  சுற்றிவர வேண்டியுள்ளதால், வேறுவழியின்றி இருபகுதிகளிலும்  கயிற்றை இணைத்துக்கட்டி , ஆபத்தையும் பொருட்படுத்தாமல் கடந்து வருகின்றனர்.

ஏற்கனவே அப்பகுதி மக்கள் மேம்பாலம் அமைக்குமாறு பலமுறை அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும் பலனின்றி தற்போது அவதிப்பட்டுவருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News