கிராம சபை கூட்டம் பற்றிய அறிவிப்பு இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

திமிரி ஊராட்சி ஒன்றியம் தாமரைப்பாக்கம் சிறப்பு கிராம சபை கூட்டம் பற்றி அறிவிப்போ தீர்மானங்களோ இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு;

Update: 2021-11-27 04:50 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தைச்சேர்ந்த தாமரைப்பாக்கம் திரௌபதியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் கிராமத்தில் சிறப்பு கிராம சபை நடத்த உள்ளது  என்பது குறித்து ,தண்டோரா,நோட்டிஸ் போன்ற அறிவிப்புகள் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும். கோயிலருகே கூட்டம் கூடியுள்ளதைக் கண்டு வந்ததாகக் கூறினர். .

அதனைத்தொடர்ந்து கிராமமக்கள் தாமரைப்பாக்கம் ஏரிக்கு நீர்வரும் கால்வாயை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றும் நூறுநாள் வேலை திட்டத்தில் ஏரியை சுத்தம் செய்யவில்லை என்று  புகார் கூறினர். மேலும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எழுதாமல் கலந்து கொண்டவர்களிடம் கையெழுத்து வாங்கியதாகவும் இதுபற்றி  கேள்வி கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

இதனால் பலர் கிராம சபை கூட்டத்தை  புறக்கணித்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாக தாமரைப்பாக்கம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News