ஷீரடி சாய்பாபா படத்திலிருந்து விபூதி,தேன்: திமிரியில் பரபரப்பு

திமிரியில் ஷீரடி சாய்பாபா கோயிலில் உள்ள அவரது படத்திலிருந்து விபூதி, தேன் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2021-10-23 13:45 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் சாய்பாபா நகரில் ஓம் ஸ்ரீ தியான சாய்பாபா என்ற பெயரில் ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது . கோயிலை புதிய வடிவில் அமைக்கும் விதமாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது .

இதனால், கோயிலில் வைத்து வழிபாடு செய்து வந்த பாபாவின் படத்தை பக்தர் ஒருவர் அருகில் உள்ள அவரது வீட்டில் வைத்து பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல பக்தர்கள் பூஜை செய்து கோண்டிருந்தனர்.

அப்போது ,ஷீரடி சாய்பாபா படத்திலிருந்து விபூதியும் சிலையிலிருந்து தேனும் வடிந்து கொண்டிருந்தது. அதனை வியப்புடன் பக்தர்கள் பக்தியில் பரவசமடைந்தனர் .அதற்குள் இதுபற்றிய தகவல் அப்பகுதி சுற்றுவட்டாரம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது .

உடனே அங்குவந்த பொதுமக்கள் அனைவரும் ஷீரடிசாய்பாபாவின் படத்தில் விபூதி,தேன் வடிந்து வந்த காட்சியைக் கண்டு பக்தியுடன் அவரை வழிபட்டுச்சென்றனர்..

Tags:    

Similar News