ஆற்காடு அருகே கால்நடை மருத்துவ முகாம்

ஆற்காடு் அடுத்த உப்புப்பேட்டையில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாமில் 300 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

Update: 2021-11-28 02:32 GMT

உப்புப்பேட்டையில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த உப்புப்பேட்டையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு சிறப்பு கிராம சபா  கூட்டம் நடந்தது . கூட்டத்தில் பார்வையாளராக இராணிப்பேட்டை மாவட்ட்ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் கலந்து கொண்டார்.

அவரிடம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை  வைத்தனர். அதன்பேரில் அவர் உத்தரவிட்டதையடுத்து உப்புப்பேட்டையில் கால்நடை மருத்துவமுகாம் நடந்தது.

முகாமை கால்நடைத்துறை மண்டல இணைஇயக்குநர் நவநீதகிருஷ்ணன் தொடங்கிவைத்தார் . ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி,து. தலைவர் உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர்கள் பத்மா, லட்சுமணன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் சுமார் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர்..

Tags:    

Similar News