வங்கியில் போலி நகை அடமானம் வைத்து பல லட்ச ரூபாய் மோசடி
ஆற்காடு தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ24 லட்சம் மோசடி செய்ததாக நகைமதிப்பீட்டாளர் உட்பட இருவர் கைது
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் உள்ளத் தனியார் வங்கியில் கடந்த அமீர்பீரான் தர்காத் தெருவைச்சேர்ந்த அசோக் குமார்(34). ஏஜன்சி நடத்திவரும் நிலையில் கடந்த ஒராண்டாக அடிக்கடி நகைகளை அடமானம் வைத்துப்பணம். பெற்றுள்ளார் .
அசோக்குமார் அடமானம் நகைகளை வைக்கும் போது அவற்றைப் பரிசோதித்து சுத்தமான தங்கநகை என்று வங்கியின் நகைமதிப்பீட்டாளர் ஆற்காடு தேவிநகரைச் சேர்ந்த சுரேஷ் (47) பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில் மொத்தமாக அசோக்குமார் வங்கியிலிருந்து ரூ24லட்சம் கடனாகப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை ஆய்வுசெய்யும் பணிகள் நடந்தது. அதில் அசோக்குமார் போலி நகைகளை அடமானம் வைத்துப் பணம் ரூ24 லட்சம் பெற்றுள்ளதும் அதற்கு உடந்தையாக வங்கி நகை மதிப்பீட்டாளர் சுரேஷ் இருந்துள்ளதும் தெரியவந்தது..
உடனே, இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மோசடி செய்த இருவரிடமும் விசாரித்த போது அவர்கள் ஒப்புக் கொண்டு பணத்தை திருப்பி கட்டிவிடுவதாகக் கூறியுள்ளனர். ஆனால், பணத்தைக் கட்டாததால் வங்கி கிளை மேலாளர் கோபி ஆற்காடு டவுன் போலீஸில் இது குறித்துபுகார் அளித்தார் .
புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அசோக்குமார்., சுரேஷ் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அதில் ,அசோக்குமார் 10 முறையும் அவரது மனைவி உமா ஒருமுறையும் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றது தெரியவந்ததையடுத்து உமாவையும் போலீஸார் தேடி வருகின்றனர்..